சம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்

எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
sapoor_swaminathan_004

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் இருந்த 177 ஏக்கர் காணியை இரண்டாவது கட்டமாக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கை இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மேலும், தாம் அமைக்கும் வீடுகளுக்கு இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ற வகையில் எரிவாயு தொலைபேசி இணைய வசதிகளை கொடுப்பதில் தவறில்லை.

ஏனெனில், இன்றைய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு சிங்கப்பூரை போல மாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய விருப்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

சம்பூர் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் இடம்பெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பேசுவார். அவ்வாறு போராடி இன்று சம்பூரை அந்த மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள் என்றார்.

Copyright © 6347 Mukadu · All rights reserved · designed by Speed IT net