கோதபாய ராஜபக்ஸ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை

Gotabaya_CI
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள காரணத்தினால் கோதபாய ராஜபக்ஸ இன்றைய விசாரணைகளில் ஆஜராகத் தவறியுள்ளார்.

கோதபாய வெளிநாடு சென்றுள்ளதாக ஆணைக்குழுவின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படை விமானப் பயணங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக கோதபாய இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக தாம் வெளிநாடு சென்றுள்ளதனால் இன்றைய விசாரணைகளில் பங்கேற்க முடியாது என கோதபாய ராஜபக்ஸ அறிவித்துள்ளார். கோதபாய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் ஆஜராக வேண்டிய நாள் பற்றி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குளோபல்தமிழ்

Copyright © 5135 Mukadu · All rights reserved · designed by Speed IT net