தமிழகத்தில் கபாலி வர வாய்ப்பில்லை- சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோகம்

kabali_new001
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தான் லிங்கா பிரச்சனைகளை எல்லாம் முடித்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் தாணுவால் தான் தெறி படம் பல இடங்களில் திரையிடப்படவில்லை என திரையரங்க சங்க தலைவர் பன்னீர் செல்வம் கூறினார்.இதை தொடர்ந்து தயவு செய்து ரஜினிகாந்த் அவர்கள் கபாலி படத்தை அவர் முன் நின்று வெளியிட வேண்டும்.இல்லையெனில் தெறி படத்திற்கு செங்கற்பட்டு, திருவள்ளூரில் தான் ரிலிஸ் செய்ய முடியாமல் போனது, தாணுவை நீங்கள் நம்பினால் கபாலி தமிழகம் முழுவதும் வெளியிட முடியாதபடி அவர் செய்து விடுவார் என திரையரங்க உரிமையாளர் கூட்டத்தில் கூறியுள்ளனர்.

Copyright © 8692 Mukadu · All rights reserved · designed by Speed IT net