பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம்

pinkballஅவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­ செய்யப்பட­வில்லை.

இளஞ்சிவப்பு நிற பந்தில் விளை­யா­டு­வ­தற்கு போதிய அனு­ப­வ­மில்லை என தென் ஆபி­ரிக்க வீரர்கள் தெரி­விப்­ப­துடன், அவ்­வாறு விளை­யா­டினால் அது தங்­க­ளது அணிக்கு பாதிப்­பாக அமையும் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

எனினும், அடி­லெய்டில் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை விளை­யாட வைப்­பதில் கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா தொடர்ந்தும் முயற்­சிக்கும் எனத் தெரி­விக்­கப்­படு­கின்­றது.

அடுத்த கோடைக்­காலம் ஆரம்­ப­மா­னதும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு நான்கு நாடுகள் கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்­ளன. இவ் விஜ­யங்­க­ளுக்­கான கால அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான சப்பல் – ஹட்லி கிண்­ணத்­திற்­கான 3 போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் நடை­பெற­வுள்­ளது.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர், ஜன­வ­ரி­யிலும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2017 ஜன­வ­ரி­யிலும் நடைபெறவுள்ளன.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் 2017 பெப்ரவரியில் நடைபெறவுள்ளது.

Copyright © 3701 Mukadu · All rights reserved · designed by Speed IT net