“pray for” (குறும்படம்) பற்றி மதி சுதா பார்வை .

13179409_1196292033748598_2244663032066894297_n
புலம்பெயர் தளத்தில் இருந்து தன் சுய திரைப்பட உருவாக்க விருப்பு வெறுப்புக்களை புறம் தள்ளி வைத்து விட்டு பொது உணர்வுப்படைப்புகளுக்கு மட்டும் முன்னிலையளிக்கும் ஒரு படைப்பாளி Ns Jana இயக்கிய குறும்படம்..
இம்முறை நாவலர் விருதுக்கு சென்ற அவரது pray for குறும்படம் பார்க்கக் கிடைத்தது. முதலில் ஈழத்தமிழ்ப்பரப்பில் உருவாக்கப்பட்ட படமா என வியக்க வைத்த உருவாக்கத்துக்கப்பால் சில நிமிடங்களே விரியும் இப்படத்தில்

இரு நாடுகளில் வெவ்வேறு அரசியல் முகங்கள் காட்டப்பட்டுள்ளது.
படம் என்ன சொல்லப் போகிறது என்பதை தலைப்பே நாசுக்காக சொல்லி விடுகிறது.
அதுமட்டுமல்லாமல் எம் இனத்துக்கு என்ன நடந்தது என்பதை எம் தளத்தில் வைத்துக் காட்டாமல் பிரான்ஸ், சிரியா தளங்களில் வைத்து இப்படித் தான் எமக்கும் நடந்தது என்பதை சுற்றி வளைத்துச் சொல்லிச் சென்றுருக்கிறார்.

படத்தின் திரைக்கதையோட்டம் வேகமானதோ அல்லது நேரத்தைச் சுருக்குவதற்காக உருவாக்கப்பட்ட காட்சி நெருக்கங்களோ படத்தை இலகுவில் புரிந்து கொள்வதில் சற்றுச் சிரமத்தைக் கொடுத்திருந்தது.
எது எப்படியே நாம் சினிமாத் துறையில் வளர்ந்து விட்டோம் என்பதற்கு உறுதியான சான்று கொடுப்பதாக இக்குறும்படம் உருவாகி நிற்கிறது என்து நிதர்சனமாகும்.
படத்துக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
1966776_754532114591261_1708980299_n

Copyright © 0386 Mukadu · All rights reserved · designed by Speed IT net