ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு

160526122000_migrant_ship_italy_624x351_marinamilitareviaapphoto
கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி, கடந்த வாரத்தின் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடியேறிகள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் கடலில் பயணிக்க பொருத்தமற்ற படகுகளில் பயணித்ததால் இத்தாலியின் தெற்கு பகுதியில் படகுகள் மூழ்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.

இப்படகுகளில் ஒன்று கவிழ்ந்ததைக் காட்டும் காட்சிகள் இத்தாலிய கடற்படை கேமராவில் படம் பிடிக்கப்பட்டன. இந்தப் படகிலிருந்து பெரும்பாலான பயணிகளை இத்தாலிய கடற்படை காப்பாற்றியது.

ஆனால், அதில் பயணித்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.
பிபிசி

Copyright © 5592 Mukadu · All rights reserved · designed by Speed IT net