கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல்

hand bomb_CIகொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமாக மூவர் உயிரிழந்துள்ளடன் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த ஆண் புனிதத் தலம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும் அவருடன் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்ய முற்பட்டவேளை குறித்த ஆணினால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பெண்ணின் தாய் மற்றும் மகள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளோபல் தமிழ்

Copyright © 6268 Mukadu · All rights reserved · designed by Speed IT net