கவிஞர் குமரகுருபரன் அகால மரணமடைந்தார்

1466294432
இன்று அதிகாலையில் வரும் என இலக்கிய உலகில் எவரும் நினைக்கவில்லை. ‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்கிற தொகுப்புக்காக சமீபத்தில் கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருதை வென்றமைக்காக நேற்று பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த கவிஞர் குமரகுருபரன் இன்று காலை மாரடைப்பால் இறந்திருக்கிறார். சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியவர், ஆட்டோவில் வந்து வீட்டு வாசலில் இறங்கும்போது மாரடைப்பு வர அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அதே ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது. பத்தே நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்ட நிலையில் எல்லோரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது அவரது மரணம். தன் சக கலைஞனுக்காக எழுத்தாளர்கள், சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் கருத்துக்களின் தொகுப்பு இங்கே,

Ajayan Bala Baskaran

மிகவும் பதற்றமாக இருக்கிறது. குமரகுருபரன் பெரிய அறிமுகமில்லை. ஓரு கூட்டத்தில் கலந்து கொண்டதோடு சரி, ‘இன்னொரு முறை வாங்க பாலா’. அவ்வளவுதான்.. மதிப்புமிக்க இயல் விருது பெற்ற கையோடு மறு நாள் வெளியேறிப் போவது பெருந்துயரம்.. பதற்றமாக இருக்கிறது.

Abdul Hameed Sheik Mohamed

நண்பர்கள் இறக்கிறார்கள். நம் மனதின் ஒரு பகுதி இறக்கிறது. குமரனின் உடல் அருகே காலையிலிருந்து அமர்ந்திருக்கிறேன். சாவின் வெயில் கணத்துக்குக் கணம் உக்கிரமாகிக் கொண்டே இருக்கிறது.

Suguna Diwakar

கவிஞர் குமரகுருபரனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் இணையத்தில் எழுதும் கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் சர்ச்சைகளின் வழியாகவே அவரை அதிகமும் அறிந்திருக்கிறேன். ஒரே நேரத்தில் ஜெயமோகனின் சீடராகவும், தீவிர திமுக ஆதரவாளராகவும் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது ஆச்சர்யமளித்தது. கவிஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள். புகைப்படங்களில் அவரது தோற்றம் ஆளுமையுடையதாக இருக்கும். இளம் கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த குமரகுருபரனின் மரணம் வருத்தமடையச் செய்கிறது. அவரது அன்புக்கு உரியவர்களாக இருந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Kuppuswamy Ganesan

கவிஞர் குமரகுருபரனின் ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ நூலுக்கு மூன்று நாட்களுக்கு முன் கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது கிடைத்திருக்கும் செய்தி வந்தது. இன்று காலை குமரகுருபரன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. குமரகுருபரன் தனது முகநூல் பக்கத்தில் தனது அபிமான வாசகமாக குறிப்பிட்டிருப்பது: ‘காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ.
மின்னம்பலம்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net