ஜெர்மனியில் குண்டுவெடிப்பு பின்னணியில் சிரிய பிரஜை.

ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய நாட்டுப் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

german_CI
புகலிடம் மறுக்கப்பட்ட சிரிய பிரஜை ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தி தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெர்மனிய நகர் Ansbach இல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனிய தென் பகுதி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த சிரிய பிரஜை, பயில் வைத்திருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குழுமியிருந்த 25000 பேர் அகற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net