நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

மாணவர்கள் படுகொலை : நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

பொலி­ஸாரின் துப்­பாக்கிச்சூட்டில் உயி­ரி­ழந்த யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகவியல் மற்றும் அர­ச­றி­வியல் துறை மாண­வர்க­ளான விஜ­ய­குமார் சுலக்ஷன், நட­ராஜா கஜன் ஆகி­யோரின் படு­கொ­லைகளைக் கண்­டித்தும் உட­ன­டி­யாக நீதி வழங்கக் கோரியும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் இளையோர் அமைச்சின் நிர்வாக பொறுப்பாளர் அம்பிகைபாகன் அகீபனினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டதோடு தமது எதிர்ப்பை வெளியிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொலி­ஸாரின் துப்­பாக்கிச்சூட்டில் உயி­ரி­ழந்த யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகவியல் மற்றும் அர­ச­றி­வியல் துறை மாண­வர்க­ளான விஜ­ய­குமார் சுலக்ஷன், நட­ராஜா கஜன் ஆகி­யோரின் படு­கொ­லைகளைக் கண்­டித்தும் உட­ன­டி­யாக நீதி வழங்கக் கோரியும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் இளையோர் அமைச்சின் நிர்வாக பொறுப்பாளர் அம்பிகைபாகன் அகீபனினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டதோடு தமது எதிர்ப்பை வெளியிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net