ஜல்லிக்கட்டு போட்டிதொடர்பான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல்

ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவுள்ளார். ஒப்புதல் அளித்ததும் இந்த சட்டம் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் கடந்த 23ம் திகதி புதிய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டம் உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து தெரிவித்து ஒப்புதல் அளித்துள்ளதனைத் தொடர்ந்து சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரதுறை ஆகிய மூன்று துறைகளும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஜனாதிபதி இன்று இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவுள்ளார்.

அதனையடுத்து அந்த சட்டம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தமிழக ஆளுனர் கையொப்பமிட்டதும் திங்கட்கிழமை முதல் சட்டம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net