பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் பாபி சிம்ஹா!

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் பாபி சிம்ஹா!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது.

வெங்கடேஷ்குமார் இயக்கும் இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர்.

பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனாக நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Copyright © 3666 Mukadu · All rights reserved · designed by Speed IT net