SMART-1 விண்கலம் சந்திரனில் மோதிய இடம் நாசாவால் கண்டுபிடிப்பு

SMART-1 விண்கலம் சந்திரனில் மோதிய இடம் நாசாவால் கண்டுபிடிப்பு

கடந்த 2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவின் ஓடுபாதைக்கு SMART-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருந்தது.

13 மாத பயணத்தின் பின் நிலவைச் சென்றடைந்திருந்த இவ் விண்கலம் அடுத்த 3 வருடங்களுக்கு சந்திர மேற்பரப்பு தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தது.

பின்னர் 2006 செப்டம்பர் 3 இல் விண்கலம் திட்டமிட்டே சந்திர மேற்பரப்பில் மோதப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

ஆனாலும் ஒரு தசாப்தகாலமாக இவ் விண்கலம் மோதிய சரியான புள்ளியை விஞ்ஞானிகளால் அறியமுடியாமல் போயிருந்தது.

தற்போது கடந்த வருடம் நாசாவால் படம்பிடிக்கப்பட்டிருந்த புகைப்படத்தின் உதவியுடன் SMART-1 விண்கலம் மோதிய திருத்தமான புள்ளியாக (ஆள்கூறுகள் 34.262° தெற்கு, 46.193° மேற்கு) என அறியப்பட்டுள்ளது.

புகைப்படத்தின்படி மேற்படி விண்கலம் சந்திரனில் மோதியதிலிருந்து வடக்கு – தெற்கு நோக்கி பயணித்திருக்கலாம் எனத் தெரியவருகிறது.

மேலும் இப் புகைப்படத்தில் இதன் விளைவாக ஏற்பட்ட பள்ளங்களையும் இனங்காணக் கூடியதாகவுள்ளதகவும் நாஸா அறிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net