வவுனியா ஒலுமடு பாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்வு.

வவுனியா ஒலுமடு பாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்வு.

1976 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒலுமடு பாடசாலை அப்பகுதி மக்களினால் வட மாகாண கல்வி அமைச்சுக்கு மகாவித்தியாலயமாக தரமுயர்த்துமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைய மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

இதேவேளை அப்பாடசாலையில் உயர்தரவகுப்புகளும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு இரு கட்டிடங்களும் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

பாடசாலையின் அதிபர் கு. விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் பிரதம அதிதியாகவும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், ப. சத்தியலிங்கம், எம். தியாகராசா, ஆகியோரும் கலந்துகொண்டதுடன் வவுனியா வடக்கு பிரதேசசபையின் உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தினை சேர்ந்த ஆசிரியர் ம. பகீரதனின் நிகழ்ச்சித்தொகுப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாடசாலையில் இருந்து பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

Copyright © 0736 Mukadu · All rights reserved · designed by Speed IT net