அரச தரப்பின் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஏழு பேரின் பெயர் பட்டியல் இதோ!

அரச தரப்பின் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஏழு பேரின் பெயர் பட்டியல் இதோ!

நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஏழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஆளும் கட்சியினர், நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதில் தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச, திலங்க சுமதிபால மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 பேர் அங்கத்துவம் வகிக்கக்கூடிய தெரிவுக் குழுவில் அதிகளவான உறுப்பினர்கள் தங்களுடைய உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இருப்பினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தங்களது கட்சிக்கே அதிக எண்ணிக்கை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிதத்துவப்படுத்தும் 7 உறுப்பினர்களுடைய பெயர் பட்டியல் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Copyright © 9162 Mukadu · All rights reserved · designed by Speed IT net