சபாநாயகர் சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுப்பார்!

சபாநாயகர் சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுப்பார்!

ஜனநாயக கொள்கைகளுக்கு மதிப்பளித்து அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு சுயாதீனமான சரியான தீர்மானங்களை சபாநாயகர் எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடந்த 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து, பொது தேர்தலை நடத்துவதாக வர்த்தமானியில் அறிவித்திருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என சபாநாகருக்கு அறிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையானோரின் விருப்புடன் கடந்த 13 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னனி உட்பட அரசியல் கட்சிகள் சிவில் சமூகங்கள் அனைத்தும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நீதிமன்ற ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் 5ஆம் மற்றும் ஆறாம் திகதிகளில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு 07ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதாகவும் இந்த வழக்கினை காலந்தாழ்த்தியிருந்தது.

எதிர்வரும் 07ஆம் திகதி உயர் நீதிமன்றம் தனது சுயாதீனத்தன்மையினூடாக ஜனநாயகமானதும் அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதுமான தீர்ப்பினை வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net