சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைப்பு!

சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தான் நினைத்த ஒரு நபரை பிரதமராக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரயெல்ல தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் அது தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கான அதிகாரமானது உயர்நீதிமன்றத்திற்கோ, ஜனாதிபதிக்கோ இல்லை.

சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத நபரொருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதாலேயே இப்படியான நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டால் எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இலங்கை அரசமைப்பில் இல்லையெனில், பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களை பின்பற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net