“அரசியல் மாற்றத்தால் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை”

“அரசியல் மாற்றத்தால் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை”

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பொருளாதாரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ‘மூடி’யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நாட்டின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலில் வீழ்ச்சி நிலை ஏற்படவில்லை எனவும் சர்வதேசத்துக்கு மீள செலுத்த வேண்டிய கடன்தொகையை விடவும் மேலதிக நிதி அரசிடம் உள்ளது எனவும் பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு 1500 மில்லியன் டொலரை கடனாக செலுத்த வேண்டி நிலை காணப்படுகின்றது. ஆனால் இந்த கடனை செலுத்துவதற்கு மேலதிகமான நிதியை பெறும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

2018 நவம்பர் (20) மாதம் வெளியிடப்பட்ட மூடி’யின் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனத்தின் (Moody’s investors service) (Moody’s) இறுதி தர மதிப்பீடு, B1 (மறை) இலிருந்து B2 (நிலையான) என தரப்படுத்தப்பட்டுள்ளமை (B1 (மறை) – B2 (நிலையானது) அடிப்படையற்றது எனவும் அந்நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட 2018 ஜூலைமாத தரப்படுத்தலுக்கு பின்னர் இலங்கையின் பொருளாதார நிலை பின்னடைவோ அல்லது பொருளாதார கொள்கைகளில் பாதிப்புக்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Copyright © 1743 Mukadu · All rights reserved · designed by Speed IT net