சீனாவின் வசமாகும் கொழும்பு துறைமுகம்?

சீனாவின் வசமாகும் கொழும்பு துறைமுகம்?

இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய கொழும்பு துறைமுகத்தின் ‘ஜய’ கொள்கலன் இறங்குதுறை பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்தவகையில் இலங்கை துறைமுக அதிகார சபையின் ‘ஜய’ கொள்கலன் முனையத்தை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான 3 கிரேன்களை இவ்வதிகார சபையின் நிதியை பயன்படுத்தி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழு சிபாரிசுக்கமைய சீனாவின் வரையறுக்கப்பட்ட சங்ஹாய் சென்ஹுவா ஹெவி இன்டஸ்ரீஸ் நிறுவனத்திடம் கையளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் நெருங்கிய நண்பரென பரவலாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 1715 Mukadu · All rights reserved · designed by Speed IT net