நாடாளுமன்றத்தில் இன்றும் அட்டகாசம் செய்வோம்!

நாடாளுமன்றத்தில் இன்றும் அட்டகாசம் செய்வோம்! எச்சரிக்கும் ஆளும் தரப்பு!

நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஆளும் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கூடுகையில், சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

நிலையியற் கட்டளைகளுக்கும் அரசியல் யாப்பிற்கும் புறம்பாகச் செயற்பட்டால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய உடன்படிக்கைகளை ஏற்படுத்தி, மத்திய வங்கி கொள்ளையிடப்பட்ட சமயத்தில் மௌனம் காத்தவர்கள் இன்று சத்தியாக்கிரகம் செய்கிறார்கள்.

அலரிமாளிகையில் அநாவசியமாக தங்கியிருந்து அதனை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் எச்சரித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக கட்சிக்குள் நெருக்கடிகள் உருவாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © 5065 Mukadu · All rights reserved · designed by Speed IT net