சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்!

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்!

நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக உலக அரங்கில் இலங்கை கேலிக்குரிய ஒன்றாக மாறியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில அத்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் நாட்டை நிருவகிக்கும் போது முன்னெடுக்கும் நடவடிக்கைகளே இந்நிலைக்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

புத்திஜீவிகள் அமைப்பொன்றுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சகல சமயத் தலைவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் எனவும் ஆதிவாசிகளின் தலைவர் மேலும் கேட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net