ஜனாதிபதியின் அற்ப ஆசையே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம்!

ஜனாதிபதியின் அற்ப ஆசையே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம்!

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்கவும் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகும் அற்ப ஆசையிலேயே நாட்டில் இவ்வாறான நெருக்கடி நிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளதாக ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹகீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

மேலும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினை சரிசெய்வதற்காக சதித்திட்டத்தால் முழு நாட்டையும் இன்று பிரச்சினைக்கு உள்ளானாக்கியுள்ளார்.

ஆனால் நாங்கள் சதித்திட்டங்களுக்கு துணைபோகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net