மைத்திரி – ரணில் முறிவுக்கு, நானே முக்கிய சூத்திரதாரி!

மைத்திரி – ரணில் முறிவுக்கு, நானே முக்கிய சூத்திரதாரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மீண்டும் சேர்த்துவைப்பதற்கான திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி நானே என எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நானே இதனை செய்தேன் இது எனது திட்டமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் அவர்கள் மத்தியில் ஒற்றுமைகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள எஸ்பி திசநாயக்க இருவரும் இடதுசாரி போக்கை கொண்டவர்கள் என்றாலும் நாட்டின் பொருளதாரம் குறித்து சிந்திக்கும்போது முற்றிலும் இடதுசாரிகள் போல சிந்திப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

இருவரும் பிரிந்தாலும் தனிப்பட்ட காரணங்களிற்கா வெவ்வேறு திசையில் சென்றாலும்இருவரையும் ஒன்றிணைக்கும் பொதுவான விடயங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரேமாதிரியான இருவரும் இணைந்து செயற்படும்போது அவர்களுடைய உறவுகள் முன்னோக்கி நகரலாம் இதன் காரணமாகவே மைத்திரி ரணில் திருமணம் இடையில் முறிவடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இணைவதற்கான முயற்சியை யார் முதலில் எடுத்தது என்ற கேள்விக்கு எங்கள் தரப்பே அதனை முதலில் ஆரம்பித்தது என எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இது காலத்தின் தேவையாகயிருந்தது நாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என நாங்கள் தெரிவித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net