ஐரோப்பாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஐரோப்பாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்நாட்டவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில், இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடூர தாக்குதலில் காயமடைந்த இலங்கையர் கோமா நிலைக்கு சென்றமையினால், 3 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர், வென்னப்புவ, பொரலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த அஷோக பெர்ணான்டோ எனப்படும் 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காயமடைந்த இலங்கையினரினால் நடத்தி செல்லும் வர்த்தக இடம் மற்றும் கட்டடத்தின் உரிமையாளரான இத்தாலி நாட்டவர் மற்றும் அவரது சகோதரர் குறித்த இடம்தொடர்பான வாடகை பணத்திற்கு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையருடன் ஆரம்பத்தில் வாய்த்தகராறில் ஈடுபட்டவர்கள் பின்னர் அந்த சம்பவத்தை மோதலாக மாற்றியுள்ளனர்.

மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

எனினும் அவர் அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தது.

மேலும், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 5406 Mukadu · All rights reserved · designed by Speed IT net