ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை!

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை!

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்தோனிய பாதுகாப்பு அமைச்சர் ஜூரி லுயிக் (செவ்வாய்க்கிழமை) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உக்ரேனுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதோடு, கப்பல் பணியாளர்களை சிறைப்பிடித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக எஸ்தோனியா பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு எஸ்தோனியா ஆதரவளிக்கும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன என்று ரஷ்யாவின் தலைமையை எச்சரிப்பதாக குறித்த தடைகள் அமைய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உக்ரேன் மீது ரஷ்யா ஏற்கனவே பொருளாதார தடைகளையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net