ஹன்சாட் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதா?

ஹன்சாட் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதா?

நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்த ஹன்சாட் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதனால் குறித்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படுகின்றார் என்றும், பிரதமர் மற்றும் ஆளுந்தரப்பின்றி சபை அமர்வுகளை கொண்டுசெல்கின்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியே சபாநாயகர் தொடர்ச்சியாக செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிய நிமல் சிறிபால டி சில்வா, நிலையியற் கட்டளைக்கு அமைவாகவும் மத்தியஸ்தமாகவும் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net