உலகெங்கும் தினசரி 137பெண்கள் கொலை : ஐ.நா தகவல்

உலகெங்கும் தினசரி 137பெண்கள் கொலை : ஐ.நா தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலர்கள் வெளியிட்ட புதியதரவுகளின்படி உலகெங்கிலும் தினமும் சராசரியாக 137பெண்கள் அவர்களது வாழ்க்கைத்துணைவராலோ அல்லது நெருங்கிய குடும்பஉறுப்பினர்களாலோ கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில்தான் பெண்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதாகவும் அவர்களின் வீடே அவர்களுக்கான மிகவும் அபாயகரமான இடமாக விளங்குவதாகவும் இவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 87ஆயிரம் பெண்களில் அரைவாசிப்பகுதியினர் அவர்களுக்கு நெருக்கமானவர்களாலேயே கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30ஆயிரம் பெண்கள், அவர்களின் வாழ்க்கைத்துணைவராலும் சுமார் 20ஆயிரம் பெண்கள் அவர்களின் உறவினராலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் இப்புள்ளிவிவர அறிக்கையானது ஒவ்வொருநாடுகளின் அரசாங்கங்களிடமிருந்தும் பெறப்பட்ட மூலாதாரங்களைக் கொண்டே கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net