‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0

‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0

லைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது ‘2.0’ திரைப்படம்.

ஹொலிவூட் தரம், 10 ஆயிரம் திரையரங்குகள் என பல சாதனைகளோடு நேற்று வெளிவந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

அந்தவகையில் ‘2.0’, சென்னை பொக்ஸ் ஒஃப்பிஸில் இதுவரை வந்த படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து முதலிடத்தை பதிவுசெய்தது.

சென்னை பொக்ஸ் ஒஃப்பிஸ் முதல் நாளில் 2.64 கோடி வசூலித்து ‘2.0’ முதலிடத்தில் உள்ளது.

இதன்மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்த ‘சர்கார்’ (2.37 கோடி) படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது.

இதேவேளை தற்போது சென்னையில் முக்கிய திரையரங்கமான ரோகினியில் ALL TIME HIGHEST DAY ONE GROSSER படம் என்ற சாதனையை 2.0 பிடித்துள்ளது.

‘2.0’ படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

உலக அளவில் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இப்படம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net