இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள்!

இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள்!

அடுத்த இரண்டு வருடங்களில் மூன்று தேர்தல்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அரச அதிகாரிகளின் கூட்டத்தில் இதனை தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குள் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என மூன்று தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டும்.

இந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிகின்றது.

கிழக்கு, வடமத்திய, சபரகமுவை ஆகிய மாகாண சபைகளின் பதவிகாலம் முடிந்து ஒரு வருடத்தையும் கடந்துள்ளது.

மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவி காலமும் அண்மையில் முடிவடைந்தது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net