பரபரப்பான நிலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

பரபரப்பான நிலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

இலங்கையில் அரசியல் நிலவரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான மிகவும் முக்கிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சட்ட மா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள், நீதித்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துரையாடலின் கலந்து கொள்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கலந்து கொள்வோர் தொடர்பான பெயர் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை அரசியல் ஸ்திரமற்ற நிலையில் பயணிப்பதால் அதனை தடுக்கும் முயற்சிகளில் பல தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் முக்கிய சந்திப்பு ஒன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பங்காளி கட்சிகள் இன்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் தலைமையிலான கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் கூட்டமைப்பினை தமக்கு பக்கத்திற்கு கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி தரப்பில் சாதகமான சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தீர்க்கமான முடிவினை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net