பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை மாற்ற முடியாது!

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை மாற்ற முடியாது!

இலங்கையின் தற்போதைய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ உள்ளபோது அவரது பதவிக்கு வேறு ஒருவரை இனி ஒருபோதும் நியமிக்க முடியாதென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்ற நிலையில் அதனை சிறந்த முறையில் பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் கட்டியெழுப்பி அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு வேண்டிய தேவைகளை மஹிந்த அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ள முடியுமெனவும் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net