அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் தனது 94ஆவது வயதில் காலமானார். இதனை அவரது மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பம் சார்பில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி பார்பரா தனது 73ஆவது வயதில் உயிரிழந்தததை தொடர்ந்து ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் இரத்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து தொடர்ந்தும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார்.

அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக சேவையாற்றிய ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், இரண்டு தடவைகள் அமெரிக்க துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவராவார்.

Copyright © 2997 Mukadu · All rights reserved · designed by Speed IT net