எனது நியமனம் சட்டப்பூர்வமானது!

எனது நியமனம் சட்டப்பூர்வமானது!

தமது நியமனம் சட்டப்பூர்வமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வைத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு – சுகதாஸ உள்ளக அரங்கில் (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“சிலர் சிண்டு முடியும் வேலைகளை செய்யப் பார்க்கின்றனர்.

அது நடக்காது. எனது நியமனம் சட்டபூர்வமானது. ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி செய்ததை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினரை ஜனாதிபதி இன்று மாலை சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © 5853 Mukadu · All rights reserved · designed by Speed IT net