வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய கனேடியத் தமிழன்

வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய கனேடியத் தமிழன்

கனடா ஒரின்ரோவில் வசித்துவரும் செந்தில் குமரன் என்பவர் பலர் அறிந்த ஒருவர் அவர் பாடகரும் கூட கனடாவில் மின்னல் எனும் இசைக்குழு ஒன்றினை உருவாக்கி தனது சொந்த செலவில் நிகழ்சிகளை ஒழுங்குபடுத்தி அதன் மூலம் நிதிகளைத் திரட்டி நிவாரணம் எனும் சமூக சேவை அமைபோன்றினையும் உருவாக்கி வடக்குக் கிழக்கில் பல உதவித்திட்டங்களை செய்து வருகின்றார்

முக்கியமாக இளம்வயதினருக்கான இலவச இருதய சத்திர சிகிச்சை செய்துவருகின்றார் எட்டுலட்சம் ,பத்துலட்சம் வரை ஒரு சத்திர சிகிச்சைக்கு செலவாகின்ற நிலையில் இதுவரை நாற்ப்பதிற்கு மேற்ப்பட்ட சத்திர சிகிச்சைகளை இலவசமாக செய்துள்ளார்

அதுமட்டுமல்லாது எழுபதுக்கும் மேற்ப்பட்ட வாழ்வாதார உதவிகள் ,மருத்துவ உதவிகள் ,நடமாடும் மருத்துவ சேவை ,கணணி கற்கை நிலையம் என்பவற்றை கனடா வாழ் தமிழ் மக்களின் நிதினுசரனையில் இலவசமாக செய்து வருகின்றார்

தனது பயனாளிகளை சந்திக்க இலங்ககை வந்த அவர் கடந்த 28.11.2018 அன்று தனது பிறந்த தினத்தை கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கொண்டாடியதுடன் அதன் பின்னர் தெருநாய்களுக்கும் உணவளித்துள்ளார்

திரு,திருமதி செந்தில்குமரன் ஆகியோர் இருவரும் இணைந்து தெருநாய்களுக்கு என முட்டை ,மற்றும் மீன் கறிகள் அடங்கிய சுமார் 550 தெருநாய்களுக்கான உணவினை தயார் செய்து கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை உள்ள தெருநாய்களுக்கு வழங்கியுள்ளனர்

இச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது அதுமட்டுமல்லாது அநாதரவாக உள்ள நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள நாய்களைப் பராமரிப்பதற்காக என்னுமோர் நிறுவனத்தை ஆரம்பிக்கும் நோக்கோடு கிளிநொச்சிப் பளைப் பகுதியில் தனது சொந்த நிதியில் காணி ஒன்றினையும் வாங்கி அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார்

கடந்த 2005 முதல் சமூக சேவையினை ஆரம்பித்த அவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடு பல வேலைத்திட்டங்களை செய்துவந்த இவர் 2009 பின்னர் தானே ஓர் அமைப்பினை உருவாக்கி இச் செயற் திட்டங்களை செய்துவருகின்றார்

இவரது வெளிப்படத்தன்மையினால் இவருக்கு கனடாவாழ் தமிழர்கள் இவருடன் சேர்ந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net