நயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள்!

நயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள்!

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ‘கொலையுதிர் காலம்’, அஜித்துடன் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ மற்றும் ‘ஐரா’ போன்ற படங்கள் அடுத்த இரு மாதங்களில் வெளியாகவுள்ளன.

அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’.

இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை வரும் பெப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே நயன்தாரா ரசிகர்களுக்கு அடுத்த இரு மாதங்கள் பெரும் கொண்டாட்டமாகவே அமையவுள்ளது.

Copyright © 5790 Mukadu · All rights reserved · designed by Speed IT net