ரணிலுக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைப்போம்!

ரணிலுக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைப்போம்!

எமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்வதே முதல் நடவடிக்கை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாட்டில் இடம்பெற்ற மிக பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளி ரணில் விக்கிரமசிங்கவே ஆகவே அவரை கைவிலங்கு போட்டு சிறையில் அடைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் தனது கருத்தினை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளோம்.

தீர்ப்பு எமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். ஒருவேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறென தீர்ப்பு வந்தால் அப்போதில் இருந்து ஆட்சியை கையில் எடுத்துக்கொள்வோம்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்தும் கொள்கைக்கு ஆதரவு வழங்காது என்பது எமக்கும் தெரியும்.

எனவே வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தி அவசியமா அல்லது நாடு பிளவு பட வேண்டுமா என்பதை வடக்கு கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

Copyright © 9562 Mukadu · All rights reserved · designed by Speed IT net