கனேடிய பிரதமரை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் மே!

கனேடிய பிரதமரை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் மே!

ஆர்ஜன்டீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற ஜீ-20 மாநாட்டின் பக்க நிகழ்வாக, நேற்று (சனிக்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 7 தசாப்த காலமாக நிதிநெருக்கடியை சந்தித்து வந்த உலக பொருளாதாரத்தை சிறந்த நிலைக்குமாற்றியமைக்கும் முக்கிய சநதிப்பாக இம்முறை ஜி-20 மாநாடு காணப்பட்டது.

உலக வரத்தக போருக்கு மத்தியில் இடம்பெறும் இந்த மாநாடு பாரிய சவாலை எதிர்கொள்ளுமென கணிப்புகள் தெரிவித்தன.

அந்தவகையில், உலக பொருளாதாரத்தின் முக்கிய இரு தூண்களான அமெரிக்காவும் சீனாவும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட இணக்கம் கண்டுள்ளமை இம்முறை மாநாட்டின் மிகமுக்கி நகர்வாக காணப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net