நாட்டை துண்டாட எதிர்க்கட்சிகள் சதி!

நாட்டை துண்டாட எதிர்க்கட்சிகள் சதி!

ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நாட்டை பிளவுப்படுத்தும் அரசமைப்பைக் கொண்டுவருவதே பிரதான நோக்கமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் கூறியுள்ளதாவது,

“மஹிந்த ராஜபக்ஷ ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றதையடுத்து இன்று நாடு ஸ்தீரமான நிலையை அடைந்துள்ளது.

இந்நிலையில் இததரப்பினருக்கு நாட்டை 9 பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருந்த காரணத்தினால் தான் ஆதரிக்கப்பட்டது.

இன்று தமிழர்கள் அனைவரும் நாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்கள். தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென புலிகள் கூறினார்கள். ஆனால், தற்போது அங்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

இதனை மேற்கொண்டதும் மஹிந்த ராஜபக்ஷதான். இவ்வாறான பாரிய பிரச்சினைகளையெல்லாம் நிறைவுக்குக் கொண்டுவந்த அவருக்கு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை.

பெரும்பான்மையை நிரூபித்தால் நாம் ஒரு வினாடி கூட அரசாங்கத்தில் இருக்க மாட்டோம். ஆனால், குறுக்குவழியில், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனைக்கமைய, சிறிகொத்தவின் தீர்மானத்துக்கு அமைவாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டுவந்தால் நாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்.”என கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net