இலங்கையில் ஹிட்லர் ஆட்சி உருவாகியுள்ளது!

இலங்கையில் ஹிட்லர் ஆட்சி உருவாகியுள்ளது!

ஒரு காலத்தில் ஹிட்லர் மக்கள் அனைவரும் என்னுடன் உள்ளார்கள் என கூறி, அரசியலமைப்பினை நீக்கி புதியதொரு சட்டத்தை உருவாக்க ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதே நிலையே இன்று உருவாகியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்த நிலை வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி ஐக்கிய தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.

ஆகவே அரசியலமைப்புடன் விளையாடுவதை உடனடியாக நிருத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிதாக அமைச்சர்கள் என வேடம் பூண்டுள்ள அனைவரும் யாப்புக்கு அமைவாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கியதேசிய முன்னணியின் பாராளுமன்ற உறப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் கிரியல்ல உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net