சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம்

சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது நிலவும் சமாதானமான சூழலை பேணுமாறு தெரிவித்தும்,

இனியொரு யுத்தம் வேண்டாம் என தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது,

குறித்த போராட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கல்து கொண்டனர்.

இனியொரு யுத்தம் வேண்டாம் என கோசங்களும் எழுப்பப்பட்டமை குறிப்பிடதக்கது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம். நாம் நடைபெற்ற யுத்தத்தில் பல்வேறு உயிர் சொத்துக்கள் என பல சந்தர்ப்பங்களில் இழந்துள்ளோம். அவ்வாறு இடம்பெற்ற யுத்த்தில் நாம் எதையும் சாதிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்ள சமாதானமான சூழலை குழப்புவதற்கு சிலர் செயற்படுகின்றனர். தமது சுயநல அரசியலிற்காக இவ்வாறு சிலரால் திட்டமிட்டு நாட்டில் சமாதானமற்ற சூழலை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில்தான் மட்டக்களப்பில் பொலிசார் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம். இந்த பின்புலத்தில் முன்னால் போராளிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் நாமும் முன்னால் போராளிகள்தான்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் சமாதானமற்ற சூழலை ஏற்படுத்த முயற்சிக்க மாட்டோம். புனர்வாழ்வு பெற்று வந்த எம்மில் பலருக்கு இவ்வாறு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏனைய முன்னால் பொராளிகளிற்கும் இவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்கும் பட்சத்தில் அவர்களும் தம்கான வாழ்வாதாரத்தினை முன்னெடுப்பார்கள்.

குறித்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் முன்னால் போராளிகள் ஒரு சிலரிற்கு பணம் கொடுத்து இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net