புதிய அமைச்சரவையை ஜனாதிபதி விரைவாக நியமிக்க வேண்டும்!

புதிய அமைச்சரவையை ஜனாதிபதி விரைவாக நியமிக்க வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விரைவாக நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே.கணக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், தங்களின் பதவி நிலைகளில் தொடர்ந்து இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையிலேயே இன்று அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மஹிந்த தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்கள் தங்களுக்கு அதிகாரமுள்ளதாக கூறி அதனை தொடர்ந்து பிரயோகிப்பார்களாயின் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலெனவும் கணக ஈஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றின் குறித்த இடைக்கால தடையுத்தரவினால் ஜனாதிபதிக்கு, அமைச்சுக்களின் செயலாளர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ப்ரதீபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net