ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கச்சத்தீவு பகுதியில் இன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (திங்கட்கிழமை) கடலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை இந்திய எல்லையருகிலுள்ள கச்சத்தீவு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொன்டிருந்தனர்.

இந்நிலையில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் குறித்த பகுதியில் மீன் பிடிக்க அனுமதி இல்லையென்றும், உடனடியாக செல்லும் படி உத்தரவு பிறப்பித்ததாகவும், சில கடற்படை வீரர்கள் அவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கியதாகவும், ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு கரை திரும்பியுள்ளனர்.

மேலும், பாம்பன் அருகிலுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதி சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமெனவும், வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net