ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க முடியும்!

ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க முடியும்!

ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை வழங்கும் பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

ஆகவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல அவரது குடியுரிமையை பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார நாற்காலியில் மைத்திரி மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் நாட்டினை நாசமாக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல அவரது குடியுரிமையை பறிக்க முடியும். அவர் செய்துள்ள தவறு சாதரணமானது அல்ல. அதனால் தான் ஜனாதிபதி அச்சத்தில் தடுமாறுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.

இதில் முதல் சரத்து நீக்கபட்டுள்ளது. இதனை எவ்வாறு நீக்க முடியும்? இவர்கள் டீல் ஒன்றினை போட்டுவிட்டனர்.

ஜனாதிபதியின் கதைக்கு இணைங்கி இவர்கள் இதனை செய்துள்ளார். அதனை செய்ய முடியாது. அவர் குற்றவாளியாகிவிட்டார். இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியுடன் டீல் போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர்.

அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் இன்று மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net