தமிழன் என்ற காரணத்திற்காகவே தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதித்தேன்!

தமிழன் என்ற காரணத்திற்காகவே தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதித்தேன்!

தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகவே தாம் தமிழ்த் திரைப்படத் துறையில் கால் பதிக்க நினைத்ததாக தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமான 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன் தெரிவித்துள்ளார்.

2.0 திரைப்படம் குறித்து பிபிசிக்கு வழங்கியுள்ள பிரத்தியோக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2.0 படத்தைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது? கத்தி பட வெளியீட்டின்போது பிரச்சனைகளைச் சந்தித்திருந்த நிலையில், துணிந்து இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

“தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்ல, பொதுவாக திரைப்படங்கள் மீது எனக்குப் பெரிய ஈர்ப்பும் ஆர்வமும் உண்டு. சிறுவயதிலிருந்தே, தினமும் ஒரு படமாவது பார்க்கும் பழக்கமுண்டு. அந்த ஆர்வம்தான் என்னை திரைப்படங்களை தயாரிக்கத் தூண்டியது“ என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பாவில் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்துகிறீர்கள்.

அப்படி இருக்கும் நிலையில், தமிழ்த் திரைப்படத் துறையில் கால் பதிக்க நினைத்தது ஏன்? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்பதே இதற்கு ஒரே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில் வெளிவந்த ‘2.O’ திரைப்படம் வசூலில்சாதனை படைத்து வருகின்றது. கடந்த மாதம் 29ஆம் திகதி வெளியான நிலையில், நேற்றுடன்(வியாழக்கிழமை) இத்திரைப்படம் வெளியாகி 8 நாட்கள் கடந்துள்ளன.

இந்த நிலையில் எட்டு நாட்களில் இத்திரைப்படம் 556 கோடி வசூல் செய்து சாதனைபடைத்துள்ளது.

‘2.O’ திரைப்படம் எட்டு நாட்களில் தமிழ்கத்தில் 125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 75 கோடியும், கேரள கர்நாடக மாநிலங்களில் 46 கோடியும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் 175 கோடியும், வெளிநாடுகளில் 135 கோடியும் வசூல் செய்துள்ளது.

மேலும் எட்டு நாட்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது ‘2.O’. இந்திய அளவில் அதிக வசூல் செய்த பட்டியலில் 2ஆது இடத்தை பிடித்துள்ளது.

‘2.O’ திரைப்படம் விரைவில் சீன மொழியில் சீனாவில் சுமார் 56 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், இத்திரைப்படத்தின் மொத்த வசூல் 1000 கோடி ரூபாவை நெருங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © 6085 Mukadu · All rights reserved · designed by Speed IT net