பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகம்

வெளிநாட்டில் தந்தை! இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்!

பொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்த போது அவர்களின் தந்தை வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், தாயார் கவனிக்காமல் கைவிட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

தனது தாய்க்கு வேறு நபர் உணவு வழங்குவதாகவும், தங்களுக்கு உணவை வழங்குவதில்லை என சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இறுதியாக உணவு உட்கொண்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு வரும் வரை உணவு எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

14 மற்றும் 13 வயதுடைய ஆண் பிள்ளைகளும் 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உணவு கோரியுள்ளனர்.

குழந்தைகளுக்கு உணவு வழங்காத தாயாரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Copyright © 6530 Mukadu · All rights reserved · designed by Speed IT net