உரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்!

உரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்!

உரிமையும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முன்னாள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, பட்டகாடு விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுவேலி அமைத்தலிற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் இருந்த மூன்று வருடத்தில் சில விடயங்களை செய்ய முடியாது இருந்தது. அதற்காக ஜனாதிபதியோடு தொடர்ச்சியாக நான் பேசி எமது மக்களின் தேவைகள் பற்றி பலமுறை பேசியிருக்கின்றேன்.

அதன் அடிப்படையில் வாக்குவங்கி பாரியளவில் இல்லாவிட்டாலும் சிறு வாக்குகள் மூலம் சுதந்திர கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் சென்ற எனக்கு உடனடியாக அமைச்சுப்பதவி தரவில்லை.

இருந்தாலும் மக்கள் தொடர்பாக அடிக்கடி பேசிய ஆர்வத்தை பார்த்து அதற்கேற்றவாறு உள்ளுராட்சி தேர்தலில் எனக்கு பாரியளவு வெற்றி கிடைத்தது.

பூச்சியத்தில் இருந்து 31 உறுப்பினர்களை வெற்றி கொண்டோம். இதன் மூலம் ஒரு பிரதி அமைச்சை ஜனாதிபதி தந்தார். இந்த ஆட்சியின் ஊடாக பல திட்டங்களைச் செய்வதற்கு முயற்சி எடுத்திருந்தோம்.

ஆனால் பல மாற்றங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு நீதிமன்றம் சென்று அமைச்சுக்களை நிறுத்தியமையால் அதை தொடர முடியாமல் போனது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net