மஹிந்தவுக்கு தொடரும் சிக்கல்!

மஹிந்தவுக்கு தொடரும் சிக்கல்!

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பினை இரத்து செய்யுமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பான வழக்கின் போது மஹிந்தவின் ஆதரவாளர்கள் தலையீடுகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தின்போது அவருக்கு நெருக்கமான பலர் நீதித்துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

மஹிந்த தொடர்பான மனு விசாரணையின் போது மஹிந்தவின் ஆதரவாளர்கள் தமது விசுவாசத்தை காட்டக்கூடிய நிலை உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு வழங்கின் போதும் நீதித்துறையில் அழுத்தம் கொடுக்கும் நபர்கள் இருக்கக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமகாலத்தில் மஹிந்தவுக்கு தொடர் தோல்விகள் ஏற்பட்டு வரும் நிலையில், அழுத்தம் பிரயோகித்து வெற்றியை தனதாக்கி கொள்ள மஹிந்த தரப்பு முயன்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net