காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும்! வடதமிழகத்திற்கு எச்சரிக்கை!

காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும்! வடதமிழகத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுவதால் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

இதன் காரணமாக எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும்.

குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் தென்கிழக்கு வங்கக்கடலில் எதிர்வரும் 19ஆம் திகதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © 5899 Mukadu · All rights reserved · designed by Speed IT net