எமது போராட்டம் ஓயாது!

எமது போராட்டம் ஓயாது!

எமக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் நாம் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாகியிருந்தன.

இதனையடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எமது கருத்துக்கு மாறான தீர்ப்பை அளித்திருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். எனினும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருப்போம்.

ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாமல், உண்மையான நீதி மக்களுக்கு கிடைக்காது” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net