மஹிந்தவின் பதவி விலகலுக்கு காரணம் யார்?

மஹிந்தவின் பதவி விலகலுக்கு காரணம் யார்? 

நாட்டு மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக நேற்று மாலை, தகவல் வெளியானதை அடுத்து.

தனது டுவிட்டர் பதிவுகளில் சமந்தா பவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள் சமந்தா பவர்,

“இது நாட்டின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதிலிருந்து ஜனாதிபதி சிறிசேன செய்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பிளவுகள் ஆழமாக முன்னர் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கி நகர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 7736 Mukadu · All rights reserved · designed by Speed IT net